Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, June 6, 2021

வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ வங்கி முக்கிய அறிவிப்பு.. தவறவிட்டால் முடக்கப்படலாம்?

நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ (SBI) 44 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. தற்போது தனது வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ நிர்வாகம் மிக முக்கிய அறிவிப்வு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது, வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்கள் ஆதார் கார்டு - பான் கார்டு எண்களை இணைக்க வேண்டுமென எஸ்பிஐ வங்கி கேட்டுக்கொண்டுள்ளது. இதன்படி, வாடிக்கையாளர்கள் ஏற்படும் சிரமத்தை தவிர்க்க ஜூன் 30ஆம் தேதிக்குள் ஆதார் - பான் எண்களை இணைக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது.

ஆதார் கார்டுடன் பான் கார்டு இணைக்கப்படாவிட்டால் பான் கார்டு செயலற்றதாக கருதப்படும். எனவே, ஆதார் கார்டுடன் பான் கார்டு இணைக்க வேண்டியது கட்டாயம் என எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.

ஆதார் கார்டுடன் பான் கார்டு எப்படி இணைப்பது?

வருமான வரித் துறையின் இணையதளத்தில் உள்ள Link Aadhaar ஆப்ஷனை தேர்வு செய்து அதில் மிக எளிமையாக இணைத்துவிடலாம்.

uidai.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அங்கு மை ஆதார்(My Aadhaar) பட்டனை கிளிக் செய்து, ஆதார்- பான் கார்டு இணைப்பு குறித்த நிலவரத்தை தெரிந்துக்கொள்ள முடியும்.

பின்னர் 12 இலக்க ஆதார் எண்ணை டைப் செய்ய வேண்டும். அதன்பின்னர் ஆதார் அட்டைக்கு கொடுத்திருக்கும் செல்போன் எண்ணுக்கு OTP வரும் . அதனை பதிவு செய்து ஆதார்- பான் கார்டு இணைப்பை செய்யமுடியும்.

No comments:

Post a Comment