Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, June 9, 2021

தமிழகத்தில் பள்ளி வகுப்புகள் தொடக்கம் - பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!

+1 வகுப்புகளை ஜூன் 3-வது வாரத்தில் தொடங்க தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
11 ஆம் வகுப்பு சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் உச்சத்தை தொட்டு வந்த நிலையில், இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது, இதையடுத்து தமிழக அரசு ஊரடங்கை பிரப்பித்து அதன் தொற்று பரவலை படிப்படியாக குறைத்துள்ளது.

மேலும் தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதல் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தேர்வுகள் நடத்தப்படாமல் 1 முதல் 8 ஆம் வகுப்புவரை உள்ள அனைத்து மாணவர்களையும் தமிழக அரசு ஆல்பாஸ் செய்தது.

இதையடுத்த கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 12 ஆம் வகுப்பு தேர்வுகளை நடத்துவதில் சிக்கல் இருப்பதால் மாணவர்களின் நலனைக் கருதி 12 ஆம் வகுப்பு தேர்வையும் ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்தது.

இதைத்தொடர்ந்து அடுத்த கல்வியாண்டு தொடங்கிவிட்ட நிலையில் 11 ஆம் வகுப்புக்கான ஆன்லைன் வகுப்புகளை ஜூன் 3-வது வாரத்தில் தொடங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அதனுடன் 11 ஆம் வகுப்பு சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10-15% கூடுதலாக மாணவர் சேர்க்கை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. மேலும் குறிப்பிட்ட பாடங்களுக்கு அதிக விண்ணப்பங்கள் வந்தால் பள்ளி அளவில் தேர்வு வைத்து 11 ஆம் வகுப்பு சேர்க்கையை நடத்திக்கொள்ளலாம் எனவும் பள்ளிக் கல்வித்துறை குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment