கல்வித் தொலைக்காட்சியில் புதிய கல்வி ஆண்டுக்கான பாடங்கள் இன்று தொடக்கம்! - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Saturday, June 19, 2021

கல்வித் தொலைக்காட்சியில் புதிய கல்வி ஆண்டுக்கான பாடங்கள் இன்று தொடக்கம்!

2021-2022ஆம் கல்வி ஆண்டுக்கான பாடங்களை கல்வித் தொலைக்காட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் ஒரு ஆண்டுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகள் இணையவழியில் பாடம் நடத்துகின்றன. அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சார்பில் கல்வித் தொலைக்காட்சி மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

சில பள்ளிகளில் வாட்ஸ் ஆப் குழுக்கள் மூலமாகவும் ஆசிரியா்கள் பாடக்குறிப்புகளை வழங்குகின்றனா். தற்போது 2ஆவது அலை நீடிப்பதால் கல்வித் தொலைக்காட்சி மற்றும் இதர மாற்று வழிகள் மூலம் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாடங்கள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறியிருந்தார் .

இந்தநிலையில் பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் 2021-2022- ஆம் கல்வியாண்டுக்கான புதிய காணொலிகள் கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளன . இந்தக் காணொலிகளில் தொடக்கக் கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரையிலான பாடப்பகுதிகள் இடம்பெறும் .

கல்வித் தொலைக்காட்சி மூலமாக புதிய கல்வி ஆண்டுக்கான பாடங்கள் சார்ந்த காணொலிகளை முதல்வா் மு . க . ஸ்டாலின் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று தொடங்கி வைக்கிறார். அதைத் தொடா்ந்து அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா பாடநூல்களையும் வழங்க உள்ளார்.

கல்வித் தொலைக்காட்சி படப்பிடிப்பு தளங்களில் தயாரிக்கப்படும் இந்தக் காணொலிகள் கடந்த ஆண்டைப் போன்றே 10க்கும் மேற்பட்ட தனியார் தொலைக்காட்சிகளுக்கும் வழங்கப்படவுள்ளன. மேலும் இந்த பாடங்கள் கல்வித் தொலைக்காட்சியின் யு-டியூப் தளத்திலும் பதிவேற்றம் செய்யப்படும்.

No comments:

Post a Comment

Post Top Ad