Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, June 1, 2021

காலையில் வெறும் வயிற்றில் இதை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகளோ ஏராளம்! இதய நோய் கூட வர வாய்ப்பில்லை!

வெந்தயத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது.

காலையில் வெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிட்டால் கிடைக்கும் ஆச்சரிய நன்மைகள்

உடல் வெப்பம் அதிகம் இருந்தால், காலையில் வெறும் வயிற்றில் வெந்தயத்தை வாயில் போட்டு தண்ணீர் குடித்தால் உஷ்ணம் உடையும்.

வெந்தயத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இதய நோய் வருவதற்கான வாய்ப்பு குறையும். மேலும் வெந்தயம் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதால், இதய பிரச்சனைகள் வர வாய்ப்பு இல்லை.

வெந்தயத்தில் உள்ள அமினோ ஆசிட், இன்சுலின் உற்பத்தியைத் தூண்டும். எனவே நீரிழிவு நோயாளிகள் தினமும் காலையில் வெந்தயத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவது நல்லது.

வெந்தயத்தில் கரையும் நார்ச்சத்து இருப்பதால், இதனை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.

வெந்தயத்திற்கு உடல் எடையைக் குறைக்கும் திறன் உள்ளது. மேலும் இதனை சாப்பிடுவதால், அதில் உள்ள நார்ச்சத்து வயிற்றை நிரப்பி, நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுத்து, உடல் எடை குறைய உதவும்.

No comments:

Post a Comment