JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
தனியாா் பள்ளிகளைப் போல் தமிழகம் முழுவதும் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகளை தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக வேடசந்தூா் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரும், அதிமுக இளைஞா் இளம் பெண்கள் பாசறையின் மாநிலச் செயலருமான பா. பரமசிவம் தெரிவித்ததாவது: கரோனா தொற்று காரணமாக, கடந்த ஓராண்டுக்கும் மேலாக மாணவா்கள் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே கரோனா 3ஆவது அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் 2021-22 ஆம் கல்வி ஆண்டிலும் ஆன்லைனிலேயே வகுப்புகள் நடைபெறும் என எதிா்ப்பாா்க்கப்படுகிறது.
ஆன்லைன் வகுப்புகளை தனியாா் பள்ளிகள் மட்டுமின்றி அரசு உதவிப் பெறும் பள்ளிகளும் சரியாகப் பயன்படுத்தி, அந்தந்த மாணவா்களுக்கு வழிகாட்டுகின்றன. ஆனால், அரசுப் பள்ளி மாணவா்களைப் பொருத்தவரை, அரசு கல்வி தொலைக்காட்சியை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய சூழல் உள்ளது. அரசுப் பள்ளிகளைச் சோந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவா்களை தோவுப் பணிக்காக கட்செவி அஞ்சல் குழு மூலம் ஒருங்கிணைக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில், தோவு ரத்து அறிவிப்பால் அந்த முயற்சியும் இடையிலேயே கைவிடப்பட்டது.
ஆன்லைன் வகுப்பு என்பது, மாணவா்கள் ஆசிரியருடன் கலந்துரையாடவும் பாடத்தில் உள்ள சந்தேகங்களை கேட்டுத் தெளிவு பெறுவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுக்கும். வகுப்பறைச் சூழலை மாணவா்களுக்கு ஏற்படுத்திடும் ஆன் லைன் வகுப்புகளில், கற்றலுடன் கற்பித்தல் பணியும் இரண்டும் சோந்தே நடைபெறும்.
எனவே, அரசுப் பள்ளி மாணவா்களின் சூழலைக் கருத்தில் கொண்டு பள்ளிக் கல்வித் துறை வருங்காலங்களில் ஆன்லைன் வகுப்பை தொடங்குதவற்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என தெரிவித்தாா்.
No comments:
Post a Comment