Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, June 30, 2021

"ஆசிரியர்களின் முயற்சியால், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு"- அமைச்சர் முத்துசாமி

ஆசிரியர்களின் முயற்சி காரணமாக அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாக, தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துச்சாமி தெரிவித்தார்.

ஈரோடு பெரியார் வீதி அரசு தொடக்கப் பள்ளியில நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் முத்துசாமி, ஒன்று முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கையை தொடங்கி வைத்து, இலவச பாடநூல்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்கள் சந்தித்திப்பில் அமைச்சர் முத்துசாமி கூறியதாவது, “பெரியார் நகர் தொடக்கப் பள்ளியில் கடந்தாண்டு 369 ஆக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை தற்போது, 69 மாணவர்களை சேர்த்து 436 ஆக உயர்ந்துள்ளது.

இதுபோன்று அனைத்து அரசு பள்ளிகளிலும், ஆசிரியர்களின் முயற்சியால் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. இதுபோன்று தாமாக முன்வந்து செய்படும் ஆசிரியர்களை ஊக்கப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஈரோடு மாவட்டத்திற்கு பல்வேறு எதிர்கால திட்டங்களை முதல்வர் கூறியுள்ளார். அதற்கான ஆலோசனை மற்றும் ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வரும் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

அதன்பின், என்னென்ன திட்டங்கள் என்பது குறித்து அறிவிக்கப்படும். தடுப்பூசி மையங்கள் முன்பு இருந்ததைவிட பல மடங்கு அதிகப்படுத்தப்பட்டு, தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. முறைகேட்டில் ஈடுபட்டதாக வந்த புகாரில் சம்பந்தப்பட்ட திமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இனிவரும் காலங்களில் இதுபோன்ற செயல்கள் நடைபெறாது.

மாவட்டத்தில் வீட்டு வசதிக்கான திட்டங்கள் குறித்து ஆய்வுசெய்து, திட்டங்கள் நடைமுறை படுத்தப்படும். அடுக்குமாடி குடியிருப்புகள் வழங்குவதை பொறுத்தவரை, மாவட்ட ஆட்சியர் முறையான நடவடிக்கை எடுப்பார். பாதாள சாக்கடை முடிவடைந்த இடங்களில் சாலை அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும்”, இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment