Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, June 14, 2021

தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!

சென்னை, அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை 12 மணிக்கு மாணவர் சேர்க்கை நடைமுறையைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேரில் ஆய்வு செய்தார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, "கொரோனா தொற்றுக் காலத்தில் பள்ளிகளில் 75 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என்று ஏற்கெனவே நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது. அதையும் இரண்டு தவணைகளாகப் பிரித்து 30 சதவீதம், 45 சதவீதமாக மட்டுமே பெறவேண்டும் என்று கூறி இருக்கிறோம்.

அந்த வகையில் மட்டுமே பள்ளிகளில் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. 75 சதவீதக் கட்டணத்தையும் மீறி பணம் வசூலிக்கப்படுவதாகப் புகார் வந்தால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், ஊரடங்கு காலத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதை என்னால் உணரமுடிகிறது. ஆசிரியர்கள் சிலரே இதுகுறித்து என்னிடம் பேசினார்கள். தனியார் பள்ளியில் இந்த பாடம் எடுத்துக் கொண்டிருந்தேன்.

இப்போது பெயிண்டிங் வேலை செய்கிறேன் என்று சில ஆசிரியர்களே வீடியோவை எடுத்து அனுப்புகிறார்கள். இதுகுறித்து முதல்வரிடம் எடுத்துச்சென்று, அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. 75% fees collect panna solra minister 75% salary teachers ku kudunganu solluvara. Kaduvuley engala kapatha yarumey illaya???

    ReplyDelete