Tuesday, June 29, 2021

SBI- ஜூலை 1 முதல் வரவுள்ள 10 முக்கிய மாற்றங்கள்.. இதோ முழு விவரம்..

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

ஜூலை 1 முதல் வரவுள்ள 10 முக்கிய மாற்றங்கள்.. இதோ முழு விவரம்..!

ஜூன் மாதம் முடிய இன்றும் நாளையும் உள்ள நிலையில் ஜூலை மாதத்தில் வரவிருக்கும் முக்கிய மாற்றங்கள் பற்றித் தான் இந்த கட்டுரையில் பார்க்கவிருக்கின்றோம். இந்த மாற்றங்கள்

சாமனியர்களுக்கு எந்த வகையில் உதவும்? அல்லது பாதிப்பா? வங்கி சேவை முதல் கொண்டு, சிலிண்டர் வரையில் அப்படி என்னென்ன மாற்றங்கள் வரப்போகின்றன வாருங்கள் பார்க்கலாம்.

இது மக்களின் அன்றாட வாழ்க்கையில் எந்த மாதிரியான தாக்கத்தினை ஏற்படுத்தலாம் வாருங்கள் பார்க்கலாம்.

எஸ்பிஐ புதிய கட்டணங்கள் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ (SBI), அதன் முக்கிய சேவையான பேசிக் சேவிங்ஸ் பேங்க் டெபாசிட் அக்கவுண்டில் (BSBD) தான் பல புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளன.

இதில் ஏடிஎம்மில் பணம் எடுப்பது,

செக் புக் சேவைகள்,

பணம் அனுப்புவது

போன்ற சேவைகளுக்கு கட்டணம் விதிக்கப்படவுள்ளன.

எஸ்பிஐ ஏடிஎம் கட்டணங்கள் எஸ்பிஐ-யின் BSBD வாடிக்கையாளர்கள் ஒரு மாதத்தில் தனது அடிப்படை சேமிப்பு கணக்கில் 4 முறை இலவசமாக பணம் எடுத்துக்கொள்ளலாம், ஜூலை 1 முதல் 4 முறைக்கு மேல் ATM

அல்லது வங்கி கிளை மூலமாகவோ பண பரிவர்த்தனை செய்தால், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 15 ரூபாய் கட்டணம் மற்றும் ஜிஎஸ்டியும் கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளது.

எஸ்பிஐ செக் புக் கட்டணம் எஸ்பிஐ-யின் BSBD வாடிக்கையாளர், ஒரு ஆண்டில் 10 காசோலை தாள்களை இலவசமாக பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். அதற்கு மேற்பட்ட காசோலைகளை பயன்படுத்த வேண்டுமெனில் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இது 10 காசோலைகள் புத்தகத்திற்கு 40 ரூபாய் கட்டணம் + GST வசூலிக்கப்படும்.

இதே 25 காசோலைகள் அடங்கிய புத்தகத்தின் பரிவர்த்தனைக்கு, 75 ரூபாய் + ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். எஸ்பிஐ -அவசர காசோலை கட்டணம் இதே அவசர காசோலை தேவைப்படும் பட்சத்தில் 10 காசோலை புத்தகத்திற்கு 50 ரூபாய் + ஜிஎஸ்டி கட்டணமாக வசூலிக்கப்படும்.

சாமனிய மக்களுக்காக கொண்டு வரப்பட்ட இந்த திட்டத்தில், தற்போது கட்டணங்கள் வசூலிக்கப்பட்ட தொடங்கியுள்ளது, வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்களில் ஒன்றாகும்.

எல்பிஜி சிலிண்டர் விலை சமையலுக்காக பயன்படுத்தப்படும் எல்பிஜி சிலிண்டர் விலை ஜூலை 1 முதல் மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. LPG சிலிண்டர்களின் விலையை ஒவ்வொரு மாதமும் எண்ணெய் நிறுவனங்களால் மாற்றப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில், சிலிண்டர்களின் விலை ஜூலை 1 முதல் மாறக்கூடும் என

எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனகே பெட்ரோல் டீசல் விலையானது அனுதினமும் அதிகரித்து வரும் நிலையில், தற்போது கேஸ் விலையும் தொடர்ந்து அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிண்டிகேட் வங்கி IFSC இயங்காது கனரா வங்கி, சிண்டிகேட் வங்கியுடன் இணைக்கப்பட்ட நிலையில், சிண்டிகேட் வங்கியின் ஐ எஃப் எஃப் சி கோடுகள் ஜூலை முதல் இயங்காது என கனரா வங்கி அறிவித்துள்ளது. சிண்டிகேட் வங்கி வாடிக்கையாளர்கள் ஜூன் 30-க்குள் தங்கள் வங்கிக்கு

சென்று IFSC குறியீடுகளை மாற்றிக் கொள்ளலாம். பழைய ஐஎஃப்எஸ்சி கோடுகளை பயன்படுத்தி, ஜூலை 1 முதல் வங்கிகளில் பரிவர்த்தனை செய்ய முடியாது என அறிவித்துள்ளது. சிண்டிகேட் செக்புக் செல்லாது

இது தவிர ஸ்விப்ட் கோடு, எம்ஐசிஆர் கோடுகள் செக் புக் என அனைத்தும் செயல்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக இதனையும் சரியான

நேரத்தில் அப்டேட் செய்து, கனரா வங்கியில் சென்று புதிய செக் புக்கிற்காக பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். ஏனெனில் ஜூலை 1க்கு பிறகு, இதன் மூலம் பரிவர்த்தனை செய்ய முடியாமல் போகலாம்.

ஹீரோ மோட்டோகார்ப் விலை அதிகரிப்பு நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் அதன் இருசக்கர வாகனங்கள் மற்றும் ஸ்கூட்டர்களின் விலையை ஜூலை 1, 2021ல் இருந்து 3,000 ரூபாய் வரை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இது மூலதன பொருட்கள் விலை அதிகரித்துள்ள நிலையில், இந்த விலை அதிகரிப்பினை திட்டமிட்டுள்ளது.

ஆந்திரா வங்கி & கார்ப்பரேஷன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு பொதுத்துறை வங்கிகளின் இணைப்புக்கு பிறகு பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஆந்திரா வங்கி மற்றும் கார்ப்பரேஷன் வங்கிகள், யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் இணைக்கப்பட்டன. இந்த நிலையில் மேற்கண்ட இரு வங்கி வாடிக்கையாளர்களும் புதிய செக் புக்கினை பெற்றுக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வங்கிகள் ஏப்ரல் 2020ல் இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. டிடிஎஸ் பிடித்தம் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே வருமான வரி தாக்கல் செய்யாதவர்களுக்கு, அரசு அடுத்த மாதத்தில் இருந்து டிடிஎஸ் பிடித்தம்

செய்ய திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. மேலும் 50,000 ரூபாய் அல்லது அதற்கும் மேல் டிடிஎஸ் செலுத்துவோரை கண்டறிந்து அவர்களை வரி வரம்புக்குள் கொண்டு வரவும் இது உதவும் என வருமான வரித்துறை கூறியுள்ளது.

வருமான வரித்துறையினரின் புதிய வசதி இது குறித்து எளிதில் இணையத்தில் கண்டறியும் விதமாக புதிய வசதி ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இது டிடிஎஸ் பிடித்தம் செய்வோருக்கும், டிசிஎஸ் வசூலிப்பவருக்கும் மிகப் பெரிய உதவியாக இருக்கும் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
Thamizhkadal Study Materials Websites Links Given Below:

WEBSITE 1 : CLICK HERE

WEBSITE 2 : CLICK HERE

WEBSITE 3 : CLICK HERE

No comments:

Post a Comment

பொதுச் செய்திகள்

கல்விச் செய்திகள்

Featured News