Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, July 10, 2021

12ம் வகுப்பு மாணவர்களுக்கான இந்த மாதம் இறுதிக்குள் மார்க் சீட் - பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தகவல்.


தமிழகத்தில் உள்ள 12ம் வகுப்பு மாணவர்களுக்கான மார்க் சீட் இந்த மாதம் இறுதிக்குள் அனைவருக்கும் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாவட்ட வாரியாக தொடர்ந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. அதன் ஒரு பகுதியாக திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆய்வு நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த மாதம் இறுதிக்குள் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் அனைவருக்கும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் கொரோனோ தொற்றின் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்களுக்கு போதிய அளவிலான கல்வியை அளிப்பது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

No comments:

Post a Comment