கொரோனா 2வது அலை தீவிரத்தால், கடந்த கல்வியாண்டில் பள்ளி, கல்லூரிகளில் தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. பள்ளிகளில் தேர்வின்றி மாணவர்கள் ஆல்பாஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை கடந்த கல்வியாண்டில் கலைக்கல்லூரிகளில் 2, 4 மற்றும் 6வது செமஸ்டர் தேர்வுகளை நடத்த முடியவில்லை. சில தன்னாட்சிக் கல்லூரிகளில் குறிப்பிட்ட தேர்வுகளை மட்டும் ஊரடங்கிற்கு முன்பு நடத்தி முடித்தனர். இந்நிலையில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கலைக்கல்லூரிகளில் தேர்வுகள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. ஆன்லைன் வகுப்புகளை மட்டும் தொடர்ந்தனர்.
தற்போது தொற்று பரவல் குறைந்து வருவதால் 2, 4, 6வது செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த தேர்வுகளை வருகிற 17ம் தேதிக்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. உடனடியாக விடைத்தாள்கள் திருத்தப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் புதிய கல்வியாண்டிற்கான வகுப்புகள் முதற்கட்டமாக 2 மற்றும் 3ம் ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் தொடங்க வாய்ப்புள்ளது. பிளஸ்2 மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டதும் ஆக.1ம் தேதி முதல் முதலாமாண்டு மாணவர் சேர்க்கையும், அவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளும் தொடங்கப்படுகின்றன.
No comments:
Post a Comment