Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, July 18, 2021

தனியார் பள்ளிகள் 40% மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை கடுமையான உத்தரவு

தனியார் பள்ளிகளில், முதல் தவணையில் 40 சதவீதமும், 2ம் தவணையில் 35 சதவீதம் என 75 சதவீதம் கட்டணங்களை மட்டுமே வசூல் செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா 2வது அலையை கடந்த ஏப்ரல் மாதம் தீவிரமாக இருந்தது. இதன் காரணமாக கடந்த ஏப்ரல் 24ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டன. இதனால், கடந்த 2021-22ம் கல்வியாண்டிற்கான நேரடி வகுப்புகள் இன்று வரை தொடங்கப்படவில்லை. ஆனால், ஒரு சில தனியார் பள்ளி நிர்வாகங்கள், கட்டணம் கேட்டு மாணவர்களின் பெற்றோர்களுக்கு நெருக்கடி தருவதாக புகார் எழுந்தது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கொரோனா தொற்றின் காரணமாக கடந்த ஏப்ரல் 24 தேதி முதல் பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டன. அதனைத் தொடர்ந்து 2021-22ம் கல்வியாண்டிற்கான நேரடி வகுப்புகள் இன்றும் தொடங்கப்படவில்லை. ஆனால் நடப்பு கல்வியாண்டில் பள்ளிகளில் கட்டணங்கள் வசூல் செய்யப்படுகின்றன என புகார்கள் வருகின்றன.

தற்போது நிலவி வரும் கொரோனா பெருந்தொற்றை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் 75 சதவீதம் மட்டும் கல்வி கட்டணம் வசூல் செய்ய வேண்டும். முதல் தவணையில் 40 சதவீதம் கட்டணத்தை ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் வசூல் செய்யலாம். மீதமுள்ள 35 சதவீதம் கட்டணத்தை நேரடி வகுப்புகள் துவங்கியப் பின்னர் 2 மாதங்களில் வசூல் செய்யலாம். மீதமுள்ள 25 சதவீதம் கட்டணங்களை வசூல் செய்வது குறித்து கொரோனா பெருந்தொற்றின் நிலையை பொருத்து அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment