Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, July 23, 2021

அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை மீண்டும் 58 ஆக மாற்ற திட்டம்?

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60ல் இருந்து, ஏற்கனவே இருந்தபடி 58 ஆக குறைக்க அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.தமிழ்நாடு அரசு பணியாளர்கள், பணியில் இருந்து ஓய்வு பெறும் வயது 58ல் இருந்து 59 ஆக, 2020ல் அதிகரிக்கப்பட்டது. 

ஆட்சி மாற்றம் அதன்பின் கடந்த பிப்ரவரியில், அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது 59ல் இருந்து 60 ஆக உயர்த்தப்படுவதாக, சட்டசபையில் 110 விதியின் கீழ், அப்போதைய முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்தார்.இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்தது. 

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், அரசியலமைப்பு மற்றும் சட்ட ரீதியான அமைப்புகள், அரசு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்கள், ஆணையங்கள், சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும், இந்த உத்தரவு பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டது.

அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது அதிகரிக்கப்பட்டதால், இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் என்ற புகார் எழுந்தது. இந்நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.தற்போதைய தி.மு.க., அரசு, ஓய்வு பெறும் வயது 60 என்பதை, ஏற்கனவே இருந்தபடி 58 ஆக குறைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

உத்தரவாத பத்திரம்இப்போதைய சூழ்நிலையில், உடனடியாக ஓய்வு பெறும் வயதை 58 ஆக குறைத்தால், ஓய்வு பெறுவோருக்கு மூன்று ஆண்டுகளுக்கான ஓய்வூதிய பணப்பலன்கள் வழங்க வேண்டும். தற்போதைய நிதி நெருக்கடியில் அது பெரும் சுமையாக இருக்கும். எனவே, முதலில் 59 வயதாக குறைத்து விட்டு, பின் 58 ஆக குறைக்கலாம் என பரிசீலிக்கப்படுகிறது.

இல்லையேல், நேரடியாக 58 ஆக குறைத்து விட்டு, ஓய்வு பெறுவோருக்கு ஓய்வூதிய பணப்பலன்களுக்கு பதிலாக, உத்தரவாத பத்திரம் அளிக்கலாம் என்றும் யோசிக்கப்படுகிறது. 

தற்போது ஓய்வூதிய வயது அதிகரிக்கப்பட்டு உள்ளதால், ஓய்வு பெறாமல் உள்ளவர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்க வேண்டி உள்ளது. அறிவிப்புஅவர்களுக்கு பதிலாக, புதிய நபர்களை தேர்வு செய்யும் போது, சம்பளம் குறைவாக வழங்கினால் போதும். இது, அரசின் செலவை குறைக்கும் என, நிதித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, முதல்வர் ஆலோசனை நடத்தி, ஓய்வூதிய வயது குறைப்பு தொடர்பான அறிவிப்பை சட்டசபையில் வெளியிட வாய்ப்புள்ளது என, தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment