JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

நடைப்பயிற்சி உடலின் ஆரோக்கியத்தை மேம்பட செய்யக்கூடியது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அதிலும் சமீப காலமாக கொரோனா ஊரடங்கு அமலுக்கு வந்து வந்து போவதால் நம் யாராலும் நடைபயிற்சியை சரியாக மேற்கொள்ள முடிவதில்லை அதனால் மக்கள் புது வகையாக 8 வடிவ நடைபயிற்சியை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர். ஆனால் இது புதுமையான நடைப்பயிற்சி அல்ல . நமது நாட்டின் சித்தர்கள் கண்டுபிடித்த இந்த 8 வடிவ பயிற்சி முறை மேலை நாடுகளுக்கு சென்று, 'இன்பினிட்டி வாக்கிங்' என்ற பெயரில் நம் நாட்டிற்கே திரும்ப வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்த உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு வழிவகை செய்யும் இந்த 8 வடிவ நடைபயிற்சியை எப்படி செய்யலாம்? அதனால் ஏற்படும் சிறப்பான நன்மைகள் என்ன? என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.
எட்டு வடிவில் நடைப்பயிற்சி செய்தால் மனிதன் நோய் இன்றி வாழலாம். மூன்றுவிதமான அளவுகளில் எட்டு வடிவ நடைப் பயிற்சி மேற்கொள்ளலாம். பொதுவாக நடைப்பயிற்சி செய்யும் போது பிராண சக்தி மட்டும் உடலில் செல்லும். அப்படி செல்லும்போது உடலில் உள்ள தீய சக்தி கால் பாதத்தின் வழியே வெளியே சென்று விடும்.
இந்த எட்டு வடிவில் நடைப்பயிற்சி செய்யும் போது காலணி அணிய கூடாது. அப்போதுதான் புவிஈர்ப்பு சக்தியின் மூலமாக மனிதனின் உடலில் உள்ள தீய சக்தி வெளியேறும். எட்டு வடிவில் நடைப்பயிற்சியினை எல்லோரும் செய்யலாம். ஆனால் கருவுற்ற பெண்கள், புற்று நோய் உள்ளவர்கள் செய்யக்கூடாது. அத்துடன் அறுவை சிகிச்சை செய்தவர்களும் மருத்துவரின் ஆலோசனையின்றி மேற்கொள்ளக்கூடாது.
எட்டு வடிவ நடைப் பயிற்சி எங்கு எப்படி செய்ய வேண்டும்:
மண் தரை, சிமெண்டு தரை, தார்ரோடு, சிமெண்ட் ரோடு போன்ற இடங்களில் செய்தால் நல்ல பயன் கிடைக்கும். இதனை மூன்றுவிதமான அளவுகளில் மேற்கொள்ளலாம்.
அதன் அளவு:
1. 4 அடி அகலம் 5 அடி நீளம்.
2. 6 அடி அகலம், 9 அடி நீளம்.
3. 6 அடி அகலம் 15 அடி நீளம் என 3 வகை அளவுகள் இருக்கலாம்.
அவரவர்களுக்கு இருப்பிட சூழ்நிலைக்கு ஏற்ப அளவுகளை தேர்ந்து எடுத்து கொள்ளலாம். தரையில் சாக்பீஸ் அல்லது கோலம் கொண்டு வரைந்து கொள்ளவும். அதாவது இரு சக்கர வாகனம் ஓட்டி பழகுவது போல் இருக்க வேண்டும். இந்தவிதமான நடைப்பயிற்சி உடலில் உள்ள நோய்களை இயற்கையாக குணப்படுத்தும். இதன் நீளவட்டம் வடக்கில் இருந்து தெற்காகவும், கிழக்கில் இருந்து மேற்காகவும் அமைக்கவும். முடிந்த வரை வடக்கு, தெற்குதான் இருக்க வேண்டும். இடவசதியில்லாதவர்கள் கிழக்கு, மேற்கு அமைக்கலாம்.
எப்போது நடக்க வேண்டும்?
இரவு உணவுக்குப் பின்பு 45 நிமிடம் கழித்து எட்டு மீது 20 நிமிடம் நடக்கவும். முதலில் வடக்கு இருந்து தெற்காக 10 நிமிடம் பின்பு தெற்கில் இருந்து வடக்காக 10 நிமிடம் நடந்தால் நாம் உண்ட உணவு சரியான முறையில் ஜீரணம் ஆகி அனைத்து உறுப்புகளுக்கும் சக்தி கிடைக்கும் வகையில் அமையும்.
இதனால் இரவு முழுவதும் ஆழ்ந்த நிலை தூக்கம் நடைபெறும். காலையில் மலச்சிக்கல் இருக்காது. மனம் ஒருநிலைப்படும். எட்டு வடிவில் நடைப்பயிற்சி செய்வதால் இயற்கையாகவே உடலில் உள்ள அனைத்து வகை நோய் நீங்கும் என்று நம் முன்னோர்களும் சித்தர்களும் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment