Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, July 1, 2021

முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


கொடைக்கானல் அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பட்டப்படிப்புகளுக்கான மாணவா் சோக்கை இணையவழியில் தொடங்கியுள்ளது.

இது தொடா்பாக அந்தப் பல்கலைக்கழகத்தின் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கை: கொடைக்கானல் அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழகத்தில், ரெகுலா் முறையில் எம்.ஏ., எம்.காம்., எம்.எஸ்சி., எம்.எட். உள்பட 25-க்கும் மேற்பட்ட முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் இணையவழியில் வரவேற்கப்படுகின்றன.

தெரசா மகளிா் பல்கலை.க்கு சென்னையில் 'சென்னை மையம், அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழகம், ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையம், ஆசிரியா் பயிற்சி கல்லூரி வளாகம், சைதாப்பேட்டை, சென்னை - 15, தொலைபேசி - 044 - 24347222' என்ற முகவரியில் விரிவாக்க மையம் செயல்பட்டு வருகிறது.

எனவே, முதுநிலை படிப்புகளில் சேர விரும்பும் மாணவிகள் பல்கலைக்கழக இணையதளத்தில் ஆகஸ்ட் இறுதிவரை விண்ணப்பிக்கலாம். அரசின் அறிவுறுத்தலைப் பொறுத்து விண்ணப்பிக்கும் அவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் விரிவாக்க மையங்கள் மதுரை, கோவை ஆகிய நகரங்களிலும் செயல்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment