JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாவது டோசை எப்போது போட்டால் அதிகபட்ச பாதுகாப்பு கிடைக்கும் என்பதை ஆய்வு ஒன்றின் அடிப்படையில் பிரபல மருத்துவ இதழான தி லான்செட் வெளியிட்டுள்ளது.
அதன்படி இரண்டு டோசுகளுக்கு இடையேயான இடைவெளி 6 வாரங்களுக்கு குறைவாக இருந்தால் பூஸ்டர் டோசுக்குப் பிறகு 55 புள்ளி ஒரு சதவிகித பாதுகாப்பு மட்டுமே கிடைக்கும் என அது தெரிவித்துள்ளது. இடைவெளி 6 முதல் 8 வாரங்களாக இருந்தால் 59 புள்ளி 9 சதவிகித பாதுகாப்பும், 9 முதல் 11 வாரமாக இருந்தால் 63.7 சதவிகித பாதுகாப்பும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இரண்டு டோசுகளுக்கான இடைவெளி 12 வாரங்கள் அல்லது அதற்கு அதிகமாக இருந்தால் பாதுகாப்பு 81 புள்ளி 3 சதவிகிதமாக அதிகரிக்கும் என தி லான்செட் கூறியுள்ளது.
No comments:
Post a Comment