JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா தலைமையில், தமிழகத்தில் உள்ள 38 மாவட்ட கல்வி அலுவலர்களுடன் பள்ளிகள் திறப்பது தொடர்பாக ஆலோசனை.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தொற்று பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில், தற்போது தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில் கொரோனா காரணமாக கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனையடுத்து, இன்று பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா தலைமையில், தமிழகத்தில் உள்ள 38 மாவட்ட கல்வி அலுவலர்களுடன் பள்ளிகள் திறப்பது தொடர்பாக காணொளி வாயிலாக ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில், பள்ளிகள் திறப்பது குறித்த முன்னேற்பாடு, மாணவர் சேர்க்கையை உயர்த்துவது, இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது, விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் மடிக்கணினி வழங்கப்பட்ட விபரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment