Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, July 1, 2021

அரசு ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு - வாழ்நாள் சான்றிதழ்!!

தமிழகத்தில் கொரோனா பரவல் எதிரொலியாக கோவை பகுதிகளில் ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு வாழ்நாள் சான்றிதழ் வழங்க விலக்கு அளிப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கொரோனா 2 ஆம் அலை காரணமாக தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக முழு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டிருந்தது. அதனால் பல விதமான சேவைகளை நிறைவேற்றுவதற்கான தடை நிலவி வருகிறது. அந்த வரிசையில் கொரோனா முழு ஊரடங்கு காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு வாழ்நாள் சான்றிதழ் வழங்குவதற்கு தடை விதிப்பதாக கோவை மாவட்ட ஆட்சியாளர் ஜி. சமீரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'தமிழகத்தில் உள்ள அரசு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு ஆண்டு தோறும் ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்களில் நேர்காணல் நடத்தப்படுவது வழக்கம்.

தற்போது கொரோனா 2 ஆம் பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் ஓய்வூதியர்களுக்கான இந்த நேர்காணல், ஜீவன் பிரமான் இணையதளத்தில் மின்னணு வாழ்நாள் சான்றிதழ் அனுப்புதல் உள்ளிட்ட பணிகளில் இருந்து சிறப்பு விலக்கு அளிக்கப்படுகிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment