Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, July 31, 2021

வெந்தய கீரையில் உள்ள மருத்துவ பலன்கள்.

வெந்தயத்தை சமையலுக்கு தினமும் பயன்படுத்துகிறோம். இட்லி தோசைக்கு மாவாட்டுகையில் சிறிதளவு வெந்தயத்தை போடுவது வழக்கம். ஆனால் வெந்தயக்கீரையை பயன்படுத்துபவர்கள் மிகவும் குறைவு. சாதராண மண் தரையில் வெந்தயத்தை தூவினாலே வெகு சீக்கிரத்தில் வளர்ந்துவிடுகிறது. இக்கீரையை பிடுங்கி சயைலுக்கு பயன்படுத்தலாம்.

அளவில் சிறியது என்றாலும் அபரிமிதமான சத்துக்களைக் கொண்டது. இக்கீரை மருத்துவப் பயன்கள் கொண்டது. இக்கீரை பல நோய்களைத் தீர்க்கும். இக்கீரையின் கசப்புத்தன்மையால் அதிகம்பேர் இதை பயன்படுத்துவதில்லை.

இக்கீரையில் வைட்டமின் A.B உயிர்சத்துக்கள் காணப்படுகிறது. நமது உடலில் எலும்புப்பகுதியினை உறுதியாக வைத்திருக்க இக்கீரை பயன்படுகிறது.

இக்கீரையின் பருத்துவப் பயன்கள்

மாதவிடாய் கோளாறா?

வெந்தயக்கீரையை அடிக்கடி சமைத்து சாப்பிட்டுவந்தால் மாதவிடாய் கோளாறுகள் நீங்கிவிடும்.

இடுப்பு வலியா ?

இன்று அதிக உழைப்பில்லாதால் ஏகப்பட்ட நோய்களை பெருகின்றன. , அவற்றில் இடுப்புவலியும் ஒன்று, இந்த வலிக்கு ஆளானவர்கள் படாதபாடுபடுகின்றனர் இவர்களுக்கு நிவராணம் வெந்தயக்கீரையை ஆகும். இக்கீரையோடு தேங்காய்ப்பால் நாடடுக்கோழிமுட்டை நிரிழிவுநோய் உள்ளவர்களுக்கு மஞசள் கருவை நீக்கவும் கசகசா சீரகம் மிளகுத்தூள் பூண்டு இவைகளோடு நெய்யையும் சோத்துச் சமைத்து சாப்பிட்டு வந்தால் இடுப்புவலி பறந்துபோகும்.

No comments:

Post a Comment