பள்ளிகள் திறப்பு தொடர்பாக பெற்றோரிடம் கருத்து கேட்க முடிவு: பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தகவல் - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Saturday, July 31, 2021

பள்ளிகள் திறப்பு தொடர்பாக பெற்றோரிடம் கருத்து கேட்க முடிவு: பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தகவல்

பள்ளிகளைத் திறப்பது குறித்துபெற்றோர் மற்றும் கல்வியாளர்களிடம் கருத்துக் கேட்க பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி அதிகாரிகள் சிலர் கூறும்போது, “பள்ளிகள் திறப்பு தாமதத்தால் மாணவர்களின் கற்றலில் பாதிப்புஏற்படுகிறது. கல்வித் தொலைக்காட்சி மற்றும் இணையவழியில் பாடங்களை நடத்தினாலும், அவைநேரடி கற்பித்தலுக்கு இணையாகாது. இதன் காரணமாக பொதுத்தேர்வு எழுதவுள்ள 10, 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் ஆகஸ்ட் மாதத்தில் பள்ளிகளைத் திறக்க பரிசீலனை செய்து வருகிறோம்.

இதுகுறித்து பெற்றோர், கல்வியாளர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு, அவை தமிழக அரசிடம் அறிக்கையாக சமர்ப்பிக்கப்படும். அதன்பின் மருத்துவக் குழுவுடன் ஆலோசித்து இந்த விவகாரத்தில் முதல்வர் இறுதி முடிவை மேற் கொள்வார்” என்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad