JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
தமிழகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு பணியை நிறைவு செய்த 576 தையல் மற்றும் ஓவிய ஆசிரியர்களுக்கு, உடனடி யாக பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழக பள்ளிக் கல்வித்துறையின் கீழ் 50 ஆயிரத்திற்கும் மேற் பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்க,நடுநிலை, அரசு உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகள் செயல் பட்டு வருகின்றன. மாண வர்களுக்கு கற்பித்தல் பணியை மேற்கொள்ள, இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரி யர்கள் நேரடியாகவும், பதவி உயர்வு மூலமும் நியமிக்கப்பட்டு வருகின்ற னர். இதுதவிர உடற்கல்வி, ஓவியம், தையல், கணினி என பல்வேறு சிறப்பு ஆசிரியர் நியமனமும் நடை பெற்று வருகிறது.
காலியாக உள்ள தையல் மற்றும் ஓவிய ஆசிரியர் பணியிடங்களுக்கு கடந்த 2017ம் ஆண்டு அறிவிப்பு வெளி யானது. இதனைத்தொடர்ந்து நடப்பாண்டு (2021) பிப்ரவரி மாதம் சான்றி தழ் சரிபார்ப்பு பணிகள் முடிந்த நிலையில், பணி நியமன ஆணை ஏதும் வழங்கப்படவில்லை. எனவே, இதனை விரைந்து வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு கலை ஆசிரியர்கள்கழ கத்தின் மாநில பொதுச் செயலாளர் அப்துல்ரஹ் மான் கூறுகையில், “தமிழக அரசுப்பள்ளிகளில் காலி யாக உள்ள 327 ஓவியம் மற்றும் 249 தையல் ஆசி ரியர் என மொத்தம் 576 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து, மாநிலம் முழுவதும், கடந்த பிப்ரவரி 10ம் தேதி ஓவிய ஆசிரியர்களுக்கும், 12ம் தேதி தையல் ஆசிரியர்களுக்கும் சான்றிதழ் சரி பார்ப்புபணிகள் நடந்தன. அப்போது, 10ம் வகுப்பு, பிளஸ் 2, தொழிலாசிரியர் (டிடிசி) சான்றிதழ் மற்றும் தமிழ்வழிச்சான்று என அனைத்தும் சரிபார்க் கப்பட்டது. ஆனால், அதன்பின்னர் பணிநிய மன ஆணை வழங்கப்பட வில்லை.இதனால், கடந்த 5 மாதங்களாக ஆசிரியர் கள் காத்திருக்கின்றனர். எனவே, அனைவருக்கும் உடனடியாக பணிநிய மன ஆணைகளை வழங்க வேண்டும். இதனை வலி யுறுத்தி, தமிழக முதல்வ ருக்கு மனு அனுப்பப்பட் டுள்ளது. இதேபோல், தொழிலாசிரியர்களுக் கான டிடிசி பயிற்சி மற்றும் தேர்வு பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நடத்தநடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார்.
No comments:
Post a Comment