Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, July 19, 2021

பள்ளிக்கு வராத மாணவர்கள் தோல்வி"-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!

மதிப்பெண் பட்டியலை வெளியிட்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 

''விரைவாக மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை வழங்க பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்தனர். தற்பொழுது கொடுக்கப்பட்டுள்ள மதிப்பெண் திருப்தியளிக்காத மாணவர்கள் விரும்பினால் மீண்டும் தேர்வெழுதிக் கொள்ளலாம். 

தேர்ச்சிபெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 16 ஆயிரத்து 473. அதேபோல் பள்ளிக்கு வராத 1,656 மாணவர்கள் தேர்ச்சிபெறவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 

உயர்கல்வித்துறை மாணவர் சேர்க்கையில் குழப்பம் நிகழக்கூடாது என்பதற்காக தசம மதிப்பில் முதல் முறையாக மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது''என்றார்.

No comments:

Post a Comment