Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, July 15, 2021

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு ஒத்திவைப்பு




புதுவையில் வெள்ளிக்கிழமை பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட இருந்த நிலையில், நோய்த்தொற்று குறையாமல் உள்ளதால், பெற்றோரின் வேண்டுகோளை அடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு ஒத்திவைப்பதாக, கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, புதுவை மாநிலத்தில் 9,10,11,12-ஆம் வகுப்புகள் மற்றும் அனைத்து கல்லூரிகளும் ஜூலை 16ம் தேதி முதல் திறக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

கல்வித்துறையும் அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தது. இந்நிலையில் புதுச்சேரியில் கரோனா நோய்த்தொற்று முழுவதுமாக குறையாத நிலையில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பது நோய்த்தொற்றை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறி பெற்றோர் கழகம் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் முதலமைச்சர் மற்றும் கல்வித்துறை அமைச்சருக்கு மனு அளித்திருந்தனர்.

இந்நிலையில் வியாழக்கிழமை காலை திடீரென துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு வந்த கல்வித்துறை அமைச்சர். ஏ நமச்சிவாயம், துணைநிலை ஆளுநர் தமிழிசையுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, புதுச்சேரியில் கரோனா நோய்த்தொற்று முழுமையாக குறையவில்லை. பெற்றோர் கழகம் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் முதலமைச்சர் மற்றும் கல்வித்துறை அமைச்சருக்கு பள்ளிகள் திறப்பதை ஒத்தி வைப்பது குறித்து பல்வேறு மனுக்கள் வந்ததது.

அது குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை செய்யப்பட்டது. தொடர்ந்து இன்று துணைநிலை ஆளுநரை சந்தித்து இது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

தற்போது புதுச்சேரியில் நோய்த்தொற்று குறையாத நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பது தற்போதைக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. நோய்த்தொற்று குறைந்த பின்பு இது குறித்து முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

இதனால் வெள்ளிக்கிழமை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது ரத்து செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment