JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
ஆய்வக உதவியாளரின் பணிகளை வரையறை செய்ய குழு - காஞ்சிபுரம் முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு!
ஆய்வக உதவியாள பணியிடம் தமிழ்நாடு பொது சார்நிலைப் பணியின் ( Tamilnadu General Subordinate Service Rules ) கீழ் வகைப்படுத்தப்பட்டு ஆசிரியரல்லாத பணியாளர் பிரிவின் கீழ் அமையப் பெற்றுள்ளதால் இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியம் பெறும் ஆய்வக உதவியாளர்களுக்கு ஆய்வகம் சார்ந்த பணிகள் செய்முறைத் தேர்வு சமயத்தில் மட்டுமே உள்ளதால் பள்ளிகளில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்கள் ஆசிரயர்களது ஊதியம் / இதர பணிகள் , தேர்வு பணிகள் , நலத்திட்டங்கள் , விலையில்லா பொருட்கள் வழங்குதல் , மாவர் சேர்கை மாற்றுச் சான்றிதழ் வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொள்வதாகவும் , ஆய்வக உதவியாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து வரையறை செய்து அளிக்கக் கோரி தமிழ்நாடு அளவிலான நேரடி நியமன பள்ளி ஆய்வக உதவியாளர் சங்கம் வாயிலாக தொடர்ந்து கோரிக்கைகள் பெறப்பட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே , இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியம் பெறும் ஆய்வக உதவியாளர்களுக்கான பணி ஒதுக்கீடு மிகவும் குறைவாக இருப்பதால் ஆய்வக உதவியாளர்களுக்கான பணிகளை வரையறை செய்ய காஞ்சிபுரம் முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் கீழ்க்கண்டவாறு குழு உறுப்பினர்கள் நியமனம் செய்து ஆணை வழங்கப்படுகிறது.
No comments:
Post a Comment