Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, August 6, 2021

ஆக.16 முதல் மருத்துவக் கல்லூரிகள் திறப்பு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

ஆக.16 முதல் மருத்துவக் கல்லூரிகளைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் கரோனா நோய்த் தொற்றுப் பரவலின் தன்மை, அதன் தாக்கம் குறித்து முதல்வர் தலைமையில் இன்று (6-8-2021) தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், கட்டுப்பாடுகளுடன் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மருத்துவக் கல்லூரிகளைத் திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துத் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிவிப்பில், ''மருத்துவக் கல்லூரிகள் மற்றும் செவிலியர் படிப்பு உள்ளிட்ட பல்வேறு மருத்துவம் சார்ந்த கல்லூரிகள், ஆகஸ்ட் 16ஆம் தேதியிலிருந்து செயல்பட அனுமதிக்கப்படுகிறது. இது தொடர்பான, விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிடும்.

இம்மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மருத்துவப் பணியாளர்கள் என்ற அடிப்படையில் அவர்களுக்கு ஏற்கெனவே தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன'' என்று தெரிவித்துள்ளார்.

கட்டுப்பாடுகளுடன் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 9 முதல் 23-ம் தேதி வரை வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களுக்கும் தடை விதிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்குப் பள்ளிகள் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் கடைகளுக்கு என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment