JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
தமிழகத்தில் , 2020-21 ஆம் நிதியாண்டில் 15 வயதுக்கு மேற்பட்ட , முற்றிலும் எழுத மற்றும் படிக்கத் தெரியாத 3.10 இலட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவை வழக்கிடும் நோக்கில் கற்போம் எழுதுவோம் இயக்கம் , ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் 60:40 என்கிற நிதிப்பங்களிப்பின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு , கற்போர்கள் அனைவருக்கும் குறைந்தப்பட்ச சுற்றல் அடைவுகளின் அடிப்படையிலான மதிப்பீட்டு முகாம் 29.07.2021 முதல் 31.07.2021 வரை மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது . மேற்காண் முகாம்களில் பங்கேற்ற மொத்த கற்போர்களின் எண்ணிக்கை 327206 பேர் ஆனால் 90428 மட்டுமே கற்போர் மதிப்பெண் மற்றும் இதர விவரங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மீதமுள்ள 236778 கற்போர்களின் மதிப்பீட்டு மதிப்பெண் விவரங்களை மையங்கள் சார்ந்த ஆசிரியர் பயிற்றுநர்களால் வருகின்ற 19.08.2021 அன்று மாலை 5.00 மணிக்கும் பதிவேற்றம் செய்திடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment