Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, August 9, 2021

பள்ளிகள் திறப்புக்கு வரவேற்பு: பாடத்திட்டங்களை 20% குறைப்பது தொடர்பாக ஆசிரியர் சங்கம் கோரிக்கை..!


பாடத்திட்டங்களை 20% குறைப்பது தொடர்பாக ஆசிரியர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையால் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படாமல் உள்ள நிலையில் வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க முதல்வர் மு.க ஸ்டாலின் அனுமதி வழங்கினார். ஆலோசனைக் கூட்டங்களில் கிடைக்கப்பெற்ற ஒருமித்த கருத்துக்களின் அடிப்படையில் ஆராய்ந்து 50% மாணவர்களுடன் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அதற்குரிய பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்திருப்பதற்கு ஆசிரியர் சங்கம் வரவேற்பு அளித்துள்ளது. சென்னையில் பள்ளி கல்வி ஆணையரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆசிரியர் சங்க மாநில தலைவர் இளமாறன், செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்ற முடிவை வரவேற்கிறோம். தொடக்கக் கல்வி வகுப்புகளையும் துவங்க பள்ளிக் கல்வி ஆணையரிடம் கேட்டுள்ளோம் என்றார். மேலும், மாணவர்களின் நலன் கருதி பாடத்திட்டங்களை 20% குறைப்பது பற்றியும் கோரிக்கை விடுதிருப்பதாக அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment