Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, August 18, 2021

பிடெக் மாணவர்கள் ஒரே நேரத்தில் பொறியியலும் படிக்க AICTE அனுமதி

பிடெக் மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கும்போதே, ஒரேநேரத்தில் பொறியியல் படிப்பையும் படிக்க அனுமதி வழங்கலாம் என்று ஏஐசிடிஇ, அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, அனைத்துகல்வி நிறுவனங்களுக்கும் ஏஐசிடிஇ அனுப்பிய சுற்றறிக்கை:

ஏஐசிடிஇ-யின் நிர்வாகக் குழுவின் 144-வது ஆலோசனைக் குழு ஜூலை 13-ம் தேதி நடைபெற்றது. அதில், பிடெக் மாணவர்கள், தாங்கள் படித்துக் கொண்டிருக்கும்போதே ஒரேநேரத்தில் பொறியியலும் படிக்க அனுமதி வழங்கவேண்டும் என்பது தொடர்பான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.

லேட்டரல் என்ட்ரி முறையில்

அதன்படி, தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களில் பிடெக் படிப்பை எடுத்துப் படிக்கும் மாணவர்களை, லேட்டரல் என்ட்ரிஅடிப்படையில் தகுதியான பொறியியல் பிரிவில் சேர்த்துக் கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. அவர்களுக்குத் தேவையான செய்முறையையும் படிக்க உரிய அனுமதி வழங்கப்படுகிறது. இதுதொடர்பாக கூடுதல் விவரங்கள்மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, உயர்கல்வி பயிலும் மாணவர்கள், தேவைப்படும் நேரத்தில் படிப்பை நிறுத்தி,அதற்குப் பொருத்தமான சான்றிதழ் பெறுதல், மீண்டும் படிப்பைத் தொடர விரும்பும்போது எளிதானசேர்க்கை உள்ளிட்ட வழிமுறைகளை புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி ஏஐசிடிஇ வடிவமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment