Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, August 25, 2021

அரசின் புதிய அறிவிப்புகள் : விடியலை எதிர்பார்த்த அரசு ஊழியர் மீது இடியாய் விழுகிறது - தலைமைச்செயலக சங்கம் வேதனை

தமிழ்நாடு தலைமைச்செயலக சங்கத்தின் தலைவர் பீட்டர் அந்தோணிசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது :

தலைமைச்செயலக பணியாளர்கள் , அரசு பணியாளர்கள் , ஆசிரியர்கள் வாழ்க்கையில் விடியல் ஏற்படும் என்று காத்திருந்தால் , அரசின் சமீபத்திய அறிவிப்புகள் இடியாய் வந்து விழுகின்றன. 7 - வது ஊதியக்குழுவின் 21 மாத நிலுவைத்தொகை , ஈட்டிய விடுப்பு சரண்டர் பணப்பலன் , ஆயிரம் ரூபாய் போனஸ் ஆகியவற்றை இழந்திருக்கிறோம். பழைய ஓய்வூதியத்திட்டத்திற்காக காத்திருந்தோம். ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் , காட்சிகள் மாறவில்லை . 

அகவிலைப்படியும் அடுத்த ஆண்டு ஏப்ரலில் வழங்கப்படும் என்று நிதித்துறை அமைச்சர் அறிவித்திருக்கிறார். மத்திய அரசு அறிவித்ததும் அதற்கு இணையாக அகவிலைப்படியை அறிவிப்பேன் ; அரசுப்பணியாளர் , ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் அவர்களின் அடிப்படை உரிமை என்றெல்லாம் எங்களின் தோள் தட்டி குறைகளைக் களைந்த மறைந்த முன்னாள் முதல் - அமைச்சர் கருணாநிதியை நினைவுகூர்கிறோம். 

சமூகநீதியையும் , அரசு பணியாளர் , ஆசிரியர்களின் அகவிலைப்படியையும் இணைத்து நிதித்துறை அமைச்சர் பேசியது எங்களின் நெஞ்சில் முள்ளாக தைத்துள்ளது. எனவே அவரது அறிவிப்புகளை உடனே திரும்பப் பெற வேண்டும். 

கடந்த ஜூலை 1 - ந்தேதியில் இருந்து முன்தேதியிட்டு அகவிலைப்படியை 10 லட்சம் அரசு பணியாளர் மற்றும் ஆசிரியருக்கு அளிக்க வேண்டும். மீண்டும் பழைய ஓய்வூதியத்திட்டத்தை அறிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment