Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, August 25, 2021

பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ரேண்டம் எண் – கலந்தாய்வு தேதி வெளியீடு!

தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதற்கான ரேண்டம் எண் மற்றும் கலந்தாய்வுக்கான தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர் சேர்க்கை:

கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. அதனை தொடர்ந்து ஆன்லைன் முறையில் பாடங்கள், தேர்வுகள் நடத்தப்பட்டது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து மாணவர்கள் கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து வந்தனர். கலை, அறிவியல் மற்றும் பொறியியல் என மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான பாடப்பிரிவை தேர்வு செய்து விண்ணப்பித்து வருகின்றனர். கொரோனா காலம் என்பதால் ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.

அண்ணா பல்கலைக்கழகம் உள்பட மாநிலம் முழுவதும் உள்ள 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகிறது. அவற்றில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூலை 26ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது. 1 லட்சத்து 60 ஆயிரம் இடங்களில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு வழங்கப்பட்டது. அதில் சேர மாணவர்கள் அதிகளவில் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து 1,74,171 பேர் ஆன்லைனில் விண்ணப்பம் அளித்துள்ளதாகவும், இவர்களில் 1,38,533 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து உள்ளனர் என பொறியியல் மாணவர் சேர்க்கை குழு கூறியுள்ளது. அதன் அடிப்படையில் கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு இன்று ரேண்டம் எண் வழங்கப்பட உள்ளது. அதன் பின் செப் 7 முதல் அக்.4 வரை கலந்தாய்வு நடைபெறும். மேலும் அக்.12 முதல் அக்.16 வரை துணை கலந்தாய்வு நடைபெறும் எனவும், அக்.20 க்குள் கலந்தாய்வை முடித்து விட்டு மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்றும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் கூறியுள்ளது.

No comments:

Post a Comment