JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
மாணவர்கள் கட்டணத்தை செலுத்தவில்லை என்பதற்காக மாற்று சான்றிதழ் கொடுக்க மறுக்கக் கூடாது என தனியார் பள்ளிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு மக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது. தனியார் பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளின் கட்டணத்தை செலுத்த முடியாமல் தவிக்கும் பெற்றோர் தங்களது பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்க விரைகின்றனர். இத்தகைய சூழலில் கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு தனியார் பள்ளிகள் டிசி வழங்க மறுப்பதாக புகார் எழுந்ததையடுத்து டி.சி இல்லாமல் மாணவர் சேர்க்கை நடத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் வழங்க மறுக்கக் கூடாது என தனியார் பள்ளிகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அப்படி ஏதேனும் பள்ளிகளுக்கு எதிராக புகார் வந்தால் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கும் என எச்சரிக்கை எச்சரிக்கை விடுத்ததோடு, டி.சி வழங்க மறுக்கும் பள்ளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்து வழக்கை முடித்து வைத்தனர்.
No comments:
Post a Comment