அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கை; விண்ணப்ப பதிவு அவகாசம் நாளையுடன் நிறைவு! - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Monday, August 9, 2021

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கை; விண்ணப்ப பதிவு அவகாசம் நாளையுடன் நிறைவு!

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர 3 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ள நிலையில், விண்ணப்பப் பதிவுக்கான அவகாசம் நாளை (ஆக. 9) நிறைவு பெறுகிறது.

தமிழகத்தில் உள்ள 143 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான இடங்கள் உள்ளன. இவற்றில் மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவுகடந்த ஜூலை 26-ம் தேதி தொடங்கியது.

நடப்பாண்டில் பிளஸ் 2 மாணவர்கள் அனைவரும் தேர்ச்சிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ள தால், கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிக மாணவர்கள் விண்ணப்பிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதன்படி, நேற்று நேற்று மாலை நிலவரப்படி 3 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதில், ஒரு லட்சத்து 90 ஆயிரம் பேர், விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தியுள்ளனர்.

இந்நிலையில், அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு நாளை நிறைவு பெறுகிறது. www.tngasa.in மற்றும் www.tngasa.org இணையதளங்கள் மூலமாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், இணையவழியில் விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், அருகே உள்ள அரசுக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மாணவர் சேர்க்கை உதவி மையத்தை அணுகலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad