Join THAMIZHKADAL WhatsApp Groups
செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படலாம் என்று முதல்வர் கூறியுள்ளார் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் மாலை அரசு ஊரடங்கு நீடித்து உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் ஒரு நேரத்தில் 50 சதவீத மாணவர்களுடன் கொரோனா தொற்று குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் துவங்க உத்தேசிக்கப் பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
மேலும், செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படலாம் என்றுதான் முதல்வர் கூறியுள்ளார். இதுகுறித்த முறையான செயல்பாட்டு வழிமுறைகள் கூட்டம் நடக்கவுள்ளது. பின்னர் முதல்வரிடம் ஆலோசித்த பிறகுதான் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.
No comments:
Post a Comment