Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, August 29, 2021

TNPSC Recruitment தமிழ்நாடு அரசு வேலை; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூன்று விதமான காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அசிஸ்டெண்ட் ஜியாலஜிஸ்ட், ஐடிஐ முதல்வர் மற்றும் உதவி அரசு வழக்கறிஞர் ஆகிய பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 82 பணியிடங்கள் நிரப்பட உள்ளன.

அசிஸ்டெண்ட் ஜியாலஜிஸ்ட் (Assistant Geologist)

மொத்த காலியிடங்கள்: 26 (சுரங்கத்துறை – 15, பொதுப்பணித்துறை – 9, வேளாண் துறை – 2)

வயதுத் தகுதி: 01.07.2021 அன்று 30 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC DNC, MBC, BC and BCM பிரிவுகளுக்கு வயது வரம்பு கிடையாது.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் M. Sc degree in Geology அல்லது degree in Geology படிப்பு முடித்திருக்க வேண்டும்.

தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு உண்டு.

எழுத்துத் தேர்வில் ஜியாலஜி பாடத்தில் 200 வினாக்களும், பொது அறிவில் 100 வினாக்களும் கேட்கப்படும். பொது அறிவில் 25 வினாக்கள் கணிதப்பகுதியில் இருந்து இடம்பெறும். தேர்வு 3 மணி நேரம் நடைபெறும்.

எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்முகத் தேர்விற்கு அழைக்கபடுவர்.

இது குறித்து மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/Document/english/12_2021_COMBINED%20GEOLOGY_ENG.pdf என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

ஐடிஐ முதல்வர் (Principal, Industrial Training Institute)

மொத்த காலியிடங்கள்: 6

வயதுத் தகுதி: 01.07.2021 அன்று 30 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC DNC, MBC, BC and BCM பிரிவுகளுக்கு வயது வரம்பு கிடையாது.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில், பி.இ அல்லது பி.டெக் படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.

தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு உண்டு.

எழுத்துத் தேர்வில் அடிப்படை பொறியியல் பாடங்களில் (Basics of Engineering) இருந்து 200 வினாக்களும், பொது அறிவில் 100 வினாக்களும் கேட்கப்படும். பொது அறிவில் 25 வினாக்கள் கணிதப்பகுதியில் இருந்து இடம்பெறும். தேர்வு 3 மணி நேரம் நடைபெறும்.

எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்முகத் தேர்விற்கு அழைக்கபடுவர்.

இது குறித்து மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/Document/english/11_2021_PRINCIPAL_ITI_AD_ENG.pdf என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

உதவி அரசு வழக்கறிஞர் (Assistant Public Prosecutor)

மொத்த காலியிடங்கள்: 50

வயதுத் தகுதி: 01.07.2021 அன்று 34 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC DNC, MBC, BC and BCM பிரிவுகளுக்கு வயது வரம்பு கிடையாது.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை சட்டம் படித்திருக்க வேண்டும். பார் கவுன்சில் உறுப்பினராக இருக்க வேண்டும். தமிழில் எழுத படிக்க தெரிவதோடு, 5 வருட பணி அனுபவமும் அவசியம்.

தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு என மூன்று படிநிலைகள் உண்டு.

முதல்நிலைத் தேர்வில் சட்டம் தொடர்பாக 80 வினாக்கள் மற்றும் கணிதப்பகுதியில் இருந்து 20 வினாக்கள் என மொத்தம் 100 வினாக்கள் கேட்கப்படும். இந்த தேர்வு 2 மணி நேரம் நடைபெறும்.

முதன்மைத் தேர்வில் சட்டம் தொடர்பாக ஒவ்வொரு பகுதிக்கும் 100 மதிப்பெண்கள் என மொத்தம் 400 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். ஒவ்வொரு பகுதிக்கும் தேர்வு தலா 3 மணி நேரம் நடைபெறும்.

பின்னர் முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும்.

இது குறித்து மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/Document/english/10_2021_APP_ENG.pdf என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.09.2021

No comments:

Post a Comment