JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகளை இன்று காலை11மணி முதல் இணையதளத்திலிருந்து தங்களது தேர்வெண் மற்றும் பிறந்த தேதியைப் பதிவு செய்து ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல துணைத் தேர்விற்கு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளித் தனித்தேர்வர்களுக்கு தேர்ச்சிக்கான மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு தேர்வு முடிவுகள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பின் காரணமாக 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. மேலும், மாணவர்களுக்கு 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு (அதிக மதிப்பெண்கள் பெற்ற மூன்று பாடங்களுடைய சராசரியை வைத்து 50 சதவிகிதம், 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு (ஒவ்வொரு பாடத்திலும் பெற்ற எழுத்துமுறை மதிப்பெண்களை மட்டும் வைத்து) 20 சதவிகிதம், 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வை வைத்து 30 சதவிகிதம் என்று மொத்தம் 100 சதவிகிதத்துக்கு மதிப்பெண் கணக்கிடப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்தது. மேலும், இதில் மதிப்பெண்கள் குறைவாக வந்ததாக கருதும் மாணவர்கள் தேர்வுகளை எழுதலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, துணைத் தேர்வு 19-07-2021 அன்று வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளில் பெற்ற மதிப்பெண்கள் குறைவாக உள்ளதாக கருதும் மாணவர்களிடமிருந்தும், மே 2021 மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வெழுத விண்ணப்பிக்கத் தவறிய தகுதியுள்ள தனித் தேர்வர்கள், துணைத் தேர்வுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்து துணைத் தேர்வை எழுதினர். தேர்வானது, கடந்த மாதம் (ஆகஸ்ட்) 6 ஆம் தேதி முதுல், 19 ஆம் தேதி வரையில் நடைபெற்றது.
இந்நிலையில், மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களின் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கலாம். பிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பித்த மாற்றுத் திறனாளிகளுக்கு, தேர்ச்சி மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்களும் இணையதளத்தில் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம்.
No comments:
Post a Comment