Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, September 29, 2021

பிளஸ் 2 தனித் தேர்வர்கள் அக்.1 முதல் விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
அரசு தேர்வுகள் இயக்குநர் சேதுராமவர்மா வெளியிட்ட அறிக்கை: ஆகஸ்ட் 2021, மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வெழுதி விடைத்தாள்களின் நகல் கோரி விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் வரும் அக்.1 ம் தேதி காலை 11 மணி முதல் 5ம் தேதி வரை www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், அதே இணையதள முகவரியில் விண்ணப்பித்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த விண்ணப்ப படிவத்தினை, பூர்த்தி செய்து இரு நகல்கள் எடுத்து வரும் அக்.4 ம் தேதி காலை 10 மணி முதல் 5ம் தேதி (மறுநாள்) மாலை 5 மணிக்குள் உரிய முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். 

மறுமதிப்பீடு கட்டணம் பாடம் ஒன்றுக்கு ரூ.505, மறுகூட்டல் கட்டணம் உயிரியல் பாடம் ரூ.305, மற்ற பாடங்களுக்கு ரூ.205 என முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் பணமாக செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News