2 நாட்கள் பொது விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு!! - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Wednesday, September 29, 2021

2 நாட்கள் பொது விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு!!

9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது .

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது . இதில் முதல் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 6 ஆம் தேதியும் , இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 9 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது .

இந்நிலையில் அன்றைய தினங்களில் பொதுமக்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது .

அதன்படி காஞ்சிபுரம் , செங்கல்பட்டு , விழுப்புரம் , கள்ளக்குறிச்சி , வேலூர் , ராணிபேட்டை , திருப்பத்தூர் , திருநெல்வேலி , தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது .

மேலும் இதர மாவட்டங்களில் உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெறும் பகுதிகளுக்கு மட்டும் பொதுவிடுமுறை அறிவிக்கப்படுவதாகவும் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை தெரிவித்துள்ளது .

No comments:

Post a Comment

Post Top Ad