Sunday, September 5, 2021

9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு இரு பருவத்தேர்வுகள் முறை – கல்வி இயக்குனரகம்!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் இரண்டு பருவ தேர்வுகள் முறையை டெல்லி கல்வி வாரியம் மாநிலத்தில் உள்ள 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு அமல்படுத்த உள்ளது.

கல்வி இயக்குனரகம்:

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் 2021-22 கல்வி அமர்வுக்கான பாடத்திட்டத்தை இரண்டு பருவத்தேர்வுகளாக நடத்த முடிவு செய்தது. இதற்கான அறிவிப்பை கடந்த ஜூலை மாதத்தில் சிபிஎஸ்இ அறிவித்தது. கொரோனா தொற்று பாதிப்பு காலத்தில் உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, முதல் பருவத்தேர்வு 2021 நவம்பர்-டிசம்பர் மற்றும் இரண்டாம் பருவத்தேர்வு 2022 மார்ச்-ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் என்று குறிப்பிட்டிருந்தது. முதல் பருவத்தேர்வில் 90 நிமிடங்களுக்கு பலதேர்வு வினாக்கள் மட்டும் உள்ள வினாத்தாள் வழங்கப்படும்.

இரண்டாம் பருவத்தேர்வில் குறுகிய வினாக்கள் அல்லது நீண்ட வினாக்கள் உள்ள வினாத்தாளாக இரண்டு மணி நேரம் தேர்வு நடத்தப்படும். சிபிஎஸ்இயின் இந்த முடிவை டெல்லி கல்வி வாரியம், 2021-22 கல்வி அமர்வில் டெல்லியில் உள்ள அனைத்து பொது, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இரண்டு பருவங்களில் 50 சதவீத பாடத்திட்டத்தில் தேர்வு நடத்தப்படும்.

கடந்த கல்வியாண்டில் கொரோனா தொற்று பரவல் அச்சம் காரணமாக மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நடத்த முடியவில்லை. இதனால் மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அரசின் தீவிர ஆலோசனைக்கு பின்னர் உள்மதிப்பீடு முறையில் மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கைக்கு உதவும் பொருட்டு இறுதி மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. இதனால் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு இரண்டு பருவ இறுதி தேர்வுகளை அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News