12 மாவட்டங்களில் " இல்லம் தேடி கல்வி திட்டம் " - அமைச்சர் அன்பில் மகேஷ் - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Tuesday, October 19, 2021

12 மாவட்டங்களில் " இல்லம் தேடி கல்வி திட்டம் " - அமைச்சர் அன்பில் மகேஷ்

1 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் தஞ்சை , திருச்சி . கடலூர் உட்பட 12 மாவட்டங்களில் வீடு தேடி பள்ளி என்ற மாலை நேர கல்வி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

இல்லம் தேடி கல்வி

இல்லம் தேடி கல்வி திட்டம் தொடர்ந்து 6 மாத காலத்திற்கு செயல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். மேலும் இல்லம் தேடி கல்வி திட்டம் மூலம் கற்றல் இடைவெளியை குறைக்க இயலும் எனவும் , இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் மாலை 5 மணி முதல் 7 மணி வரை மாணவர்களை மையங்களுக்கு அனுப்ப வேண்டும் தெரிவித்தார்.

தன்னார்வலர் :

20 மாணவர்களுக்கு ஒரு தன்னார்வலர் என்ற விகிதத்தில் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 12ஆம் வகுப்பு வரை படித்த தன்னார்வலர் மூலமும், 6,7,8 வகுப்பு மாணவர்களுக்கு பட்ட படிப்பு படித்த தன்னார்வலர் மூலமும் பாடம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தின் தொடக்கமாக விழிப்புணர்வு வாகனத்தை தொடங்கிவைத்து அமைச்சர் அன்பில் மகேஷ் மேற்கண்ட தகவல்களை செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad