Join THAMIZHKADAL WhatsApp Groups
கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து ஆங்காங்கே நல்ல மழை பெய்து வருகிறது. வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் அடுத்த 4 நாட்களுக்கு மழை தொடர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே தூத்துக்குடி, நெல்லை, திருச்சி, திருவாரூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை ஆகிய ஏழு மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாகப் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்திருந்தனர்.
அந்த வகையில் கடலூர் மாவட்டத்திலும் தொடர் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக கடலூர் மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment