ஆய்வக உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க விவரங்கள் அனுப்ப பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு! - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Monday, November 22, 2021

ஆய்வக உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க விவரங்கள் அனுப்ப பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

ஆய்வக உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கக் கோரியது சார்ந்து விவரங்கள் அனுப்ப பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!அரசாணை நிலை எண் .63 நிதித் ( ஊதியப்பிரிவு ) துறை நாள் 26.02.2011 க்கு பிறகு ஆய்வக உதவியாளர் பதவியிலிருந்து பணி மாறுதல் மூலம் இளநிலை உதவியாளராக நியமனம் பெற்ற பணியாளர்களின் விவரம் , உதவியாளர்களாக பதவி உயர்வு பெற்ற பணியாளர்களின் விவரம் , ஆய்வக உதவியாளராகப் பணிபுரிந்து பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களின் விவரம் , ஆய்வக உதவியாளராகப் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான் பணியாளர்களின் விவரம் , தற்போது பணிபுரியும் பணியாளர்களின் எண்ணிக்கை விவரத்தினை இத்துடன் இணைக்கப்பட்ட படிவத்தில் பூர்த்தி செய்து 22.11.2021 பிற்பகல் 03.00 மணிக்குள் அ 4 பிரிவு மின்னஞ்சல் மூலமும் மற்றும் இணை இயக்குநரின் ( பணியாளர் தொகுதி ) மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பி வைக்குமாறு , முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேற்காணும் விவரங்களைக் கல்வி மாவட்டம் வாரியாகப் பெற்று முதன்மைக் கல்வி அலுவலர் வருவாய் மாவட்ட அளவில்தொகுத்து சரியான விவரங்களை மட்டுமே அனுப்பி வைக்குமாறும் கேட்டுக் கொள்ளலாகிறது . மேற்காண் விவரங்களில் ஏதேனும் தவறுகள் இருப்பின் அதற்கு சம்பந்தப்பட்ட அலுவலர்களே முழுப் பொறுப்பேற்கக்கூடும் என்பதையும் தெரிவிக்கலாகிறது . 7 L இவ்விவரங்கள் அரசுக்கு அனுப்ப வேண்டியுள்ளதால் , இதில் தனிகவனம் செலுத்தி மேற்குறிப்பிட்ட காலகெடுவிற்குள் தவறாமல் அனுப்பி வைக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad