Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, December 25, 2021

ஆயுர்வேதா, சித்தா படிப்பு விண்ணப்பங்கள் வரவேற்பு.


ஆயுர்வேதா, சித்தா, யுனானி, ஓமியோபதி மருத்துவ பட்டப் படிப்புகளில் சேர, மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழகத்தில் உள்ள இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவக் கல்லுாரிகளில், ஆயுர்வேதா, சித்தா, யுனானி, ஓமியோபதி மருத்துவ பட்டப் படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.மேல்நிலைப் பள்ளி தேர்வில் அறிவியல், ஆங்கிலப் பாடங்கள் எடுத்து தேர்ச்சி பெற்று, 'நீட்' தேர்வில் தகுதி மதிப்பெண் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பேடை, அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு தனித்தனியாக, www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் 28ம் தேதி காலை 10:00 மணியில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

ஜனவரி 18 விண்ணப்பத்தை பதிவிறக்கம்செய்ய கடைசி நாள். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களையும், ஜனவரி 18 மாலை 5:30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.அதேபோல், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள, இரண்டு சுயநிதி ஓமியோபதி மருத்து வக் கல்லுாரிகளில், எம்.டி., ஓமியோபதி மருத்துவப் படிப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.ஓமியோபதி மருத்துவத்திற்கான நுழைவுத் தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்தை, www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

No comments:

Post a Comment