Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, January 16, 2022

ஜன .19 ஆம் தேதி முதல் ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டும் - பள்ளிக்கல்வித்துறை


ஜன.31 வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களுக்கு மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது, ஆசிரியர்களுக்கு விடுமுறை இல்லை என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொங்கல் விடுமுறை முடிந்து ஜன .19 ஆம் தேதி முதல் ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டும் எனவும் ஆசிரியர்களுக்கான அலுவல் பணிகள் பள்ளிகளில் தொடர்ந்து நடைபெறும் , ஏற்கனவே நடைபெற்று வந்த பயிற்சி வகுப்புகள் ஜன . 19 - முதல் தொடரும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

“ஆசிரியர்கள் வரும் 19ம் தேதி முதல் வழக்கம் போல் பள்ளிகளுக்கு வருகை தர வேண்டும்.


ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் தொடரும்


அலுவல் சார்ந்த பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட வேண்டும்”


- பள்ளி கல்வித்துறை விளக்கம்.






No comments:

Post a Comment