Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, February 20, 2022

5,417 காலி பணியிடங்கள்! குரூப் 2 தேர்வுகளுக்கு எப்படி விண்ணப்பிப்பது?

தேர்தல் திருவிழா எல்லாம் முடிந்து விட்டது. இனி ரிசல்ட் வெளிவந்ததும் நான் பெரியவன், நீ பெரியவன் என அரசியல் தலைவர்கள் கொண்டாடிக் கொண்டிருப்பார்கள்.

உங்கள் ஊரில் நீங்கள் மாஸ் காட்டாமல், எதிர்காலத்தை சரியாக திட்டமிட்டுக் கொள்ளுங்கள். 5,000க்கும் மேற்பட்ட அரசு வேலைகளுக்கான குரூப் தேர்வுகளுக்கு தேதி அறிவித்து விட்டார்கள். 

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருவதையடுத்து நடப்பாண்டிற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2A தேர்வுகளுக்கான தேதிகள் வெளியிடப்பட்டுள்ளன.

பிப்ரவரி 23ம் தேதி முதல் மார்ச் 23 வரை குரூப் 2, குரூப் 2ஏ தேர்விற்கு https://www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 

இவர்களுக்கான தேர்வு மே 21ம் தேதி தேர்வு நடைபெறும்.இதில் மொத்தம் 200 கேள்விகளுக்கு 300 மதிப்பெண்கள் வழங்கப்படும். அதில், 300 மதிப்பெண்களுக்கு 90 மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சியடையலாம். 200 கேள்விகளில் 100 கேள்விகள் தமிழ் மொழி தகுதி தேர்வாக கருதப்படும். மொத்தம் 5,417 பணியிடங்களுக்கு இந்த தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.

இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்படும். டிசம்பர், ஜனவரி மாதங்களில் கலைந்தாய்வு நடைபெறும்.

தமிழ்- 100 கேள்விகள்

பொது அறிவியல் - 75 கேள்விகள்

Aptitute டெஸ்ட்-25 கேள்விகள்

ஆங்கில வழிக் கல்வி பயின்றவர்களுக்கு ஆங்கிலத்தில் 200 கேள்விகள் கேட்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment