Subscribe Us

Wednesday, March 9, 2022

10.03.2022 முற்பகல் பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களை பணியில் சேர உத்தரவு!


பட்டதாரி ஆசிரியர் / பள்ளித் துணை ஆய்வர் மற்றும் அதனையொத்த பதவியில் இருந்து பணி மாறுதல் மூலம் 07.03.2022 அன்று முதல் நடைபெற்று முடிவடைந்துள்ள பதவி உயர்வு கலந்தாய்வில் கலந்துகொண்டு முதுகலை ஆசிரியர்களாக / உடற்கல்வி இயக்குநர் நிலை -1 ஆகப் பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களை 09.03.2022 அன்று பிற்பகல் பணியில் இருந்து விடுவிக்குமாறு பார்வையில் காணும் 07.03.2022 நாளிட்ட செயல்முறைகள் வாயிலாகத் தெரிவிக்கப்பட்டது.

அவ்வாறு பணிவிடுவிப்பு பெற்ற ஆசிரியர்கள் 10.03.2022 முற்பகல் பணியில் சேரவேண்டும் என சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்திடுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Popular Feed