சோம்புத் தண்ணீரை அதிகாலையில் குடிப்பதால் பல நன்மைகள் உள்ளன. குறிப்பாக தினமும் வெறும் வயிற்றில் சோம்புத் தண்ணீரை குடித்து வந்தால், எடை குறையும், கண் பார்வை தெளிவடையும்உண்மையில், பெருஞ்சீரகம் என்றும் அறியப்படும் சோம்புத் தண்ணீர் பல உடல்நலப் பிரச்சினைகளைப் போக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மசாலாப் பொருளாகப் பயன்படுத்தப்படும் சோம்பு, கை வைத்தியத்தில் முக்கியமான ஒன்று.
வயிற்று உப்புசத்தைத் தணிக்கும் சோம்பு, பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளையும் சீர் செய்கிறது.
கண்களின் பலவீனத்தை நீக்குகிறது
சோம்புத் தண்ணீரை தினமும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அபரிமிதமான பலன்கள் கிடைக்கும். கண்களின் பலவீனத்தை நீக்கும் என்று நம்பப்படுகிறது.
சோம்பில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், கண்களின் பலவீனத்தை நீக்குவது மட்டுமல்லாமல், கண்களின் வீக்கம் மற்றும் எரிச்சலிலிருந்து நிவாரணம் அளிக்கும். எனவே தினமும் சோம்பை, தண்ணீரில் கலந்து பானமாக எடுத்துக் கொள்வது நல்லது.



No comments:
Post a Comment