JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
சென்னை கிண்டி ஐஐடியில் மாணவர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட 10 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளதை அடுத்து அரசு அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளை முடிவுக்கு வந்தது.. இந்த சூழலில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள பள்ளிகளில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.. இதனால் பல மாநிலங்களில் மீண்டும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது..
கோவிட்-19 கட்டுப்பாடுகளை நீக்கியது, நேரடி வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறப்பது, சமூகமயமாக்கல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அதிகரிப்பது ஆகியவை டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.. எனவே தொடர்ச்சியான கண்காணிப்பு தேவை என்றும், 4-வது அலை விரைவில் தொடங்கலாம் என்றும் எச்சரித்து வருகின்றனர்..
இந்நிலையில் சென்னை கிண்டி ஐஐடியில் மாணவர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட 10 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.. இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.. அவர்களில் 3 பேருக்கு அறிகுறிகள் இல்லை எனவும், 7 பேருக்கு லேசான அறிகுறிகள் உள்ளது.. இதனால் அவர்களுடன் தொடர்பில் இருந்த மேலும் 18 கொரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளது.. பரிசோதனைகளை அதிகரிக்கவும், கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவும் மருத்துவ செயலர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார்..
No comments:
Post a Comment