Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, April 20, 2022

6 முதல் 9-ம் வகுப்பு வரை ஆண்டு இறுதித்தேர்வு மே 5-ந்தேதி தொடங்குகிறது!

10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த மாதம் (மே) பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற உள்ளது.

இந்த நிலையில் 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எப்போது தேர்வு தொடங்கும்? என்ற அறிவிப்பை சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் அறிவித்து இருக்கிறது.

அதன்படி, சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், அ

னைத்து வகை பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் ஆளுகைக்கு உட்பட்ட அரசு, அரசு உதவி பெறும், சென்னை பள்ளிகள், மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள், சிறப்பு பள்ளிகள் என அனைத்து வகை பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சென்னை மாவட்ட தேர்வுக்குழுவின் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.


இதில் 6, 7-ம் வகுப்புகளுக்கான 3-ம் பருவத் தேர்வு மற்றும் 8, 9-ம் வகுப்புகளுக்கான ஆண்டு இறுதித் தேர்வு அடுத்த மாதம் (மே) 5-ந்தேதி முதல் நடைபெற உள்ளது. அதன்படி, 5-ந்தேதி (வியாழக்கிழமை) தமிழ், 7-ந்தேதி (சனிக்கிழமை) ஆங்கிலம், 9-ந்தேதி (திங்கட்கிழமை) விருப்ப மொழித் தேர்வு, 10-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கணிதம், 11-ந்தேதி (புதன்கிழமை) அறிவியல், 12-ந்தேதி (வியாழக்கிழமை) சமூக அறிவியல் தேர்வு நடைபெற உள்ளது.


பிற்பகல் 1.45 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்வுக்கான நேரமாக அறிவிக்கப்படுகிறது. இதில் முதல் 10 நிமிடம் வினாத்தாளை படிப்பதற்கு, அடுத்த 5 நிமிடம் விடைத்தாளில் விவரங்களை பூர்த்தி செய்வதற்கும், அதன் பின்னர் 3 மணி நேரம் தேர்வு எழுதுவதற்கும் நேரம் ஒதுக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment