JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க பலரும் பலவித முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அண்மைக் காலமாக சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகின்றது.
சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்று பலரும் பல மருந்துகள் மற்றும் மாத்திரைகளை உட்கொண்டு வருவர். இன்னும் சிலர் மருத்துவமனைக்கும், வீட்டுக்கும் அலைந்து கொண்டே இருப்பர். நீங்கள் சர்க்கரையை உங்களின் கட்டுப்பாட்டில் வைக்க விரும்புகிறீர் எனில், உங்களின் உணவு முறையில் சில மாற்றங்களை செய்தாலே போதும்.
டியூக் ஹெல்த் நிறுவனத்தில் உள்ள டயட்டீஷியன் மற்றும் நீரிழிவு நிபுணரான எலிசபெட்டா பாலிட்டி கூறுகையில், தாவர அடிப்படையிலான உணவுகள் மிகவும் ஆரோக்கியமானவை. ஏனென்றால் இந்த உணவுகள் பதப்படுத்தப்படாது. இதில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. நார்ச்சத்து காரணமாக ஊட்டச்சத்தின் செரிமானம் குறைந்து பசியின்மை உணர செய்யும்.
ஹோவர்டின் ஆராய்ச்சியில் முக்கிய தகவல்
ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 10,000 பேரிடம் ஆய்வு செய்தது, இதில் டைப் 2 நீரிழிவு நோயின் அறிகுறிகளைக் கொண்டவர்கள் குறைவான ஆரோக்கியமான தாவர அடிப்படையிலான உணவுகளை உட்கொள்வதைக் கண்டறிந்தனர். இந்த நபர்கள் உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தில் இருப்பது கண்டறியப்பட்டது.

இவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்
ஆரோக்கியமான தாவர அடிப்படையிலான உணவுகளில், நாம் காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள் மற்றும் கொட்டைகள் (நட்ஸ்) சாப்பிடலாம்.
நீரிழிவு நோயாளிகள் கண்டிப்பாக இவற்றை சாப்பிடக்கூடாது
பேரீச்சம்பழம்: பேரீச்சம்பழத்தில் சர்க்கரையின் அளவு மிக அதிகமாகக் காணப்படுகிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் அபாயம் உள்ளது. ஆகையால் நீரிழிவு நோயாளிகள் பேரீச்சம்பழம் அல்லது கஜூர் ஆகியவற்றை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
பிரெட்: நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவு மற்றும் பானங்களில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் வெள்ளை ரொட்டியை தவிர்ப்பது நல்லது. பொதுவாக நீரிழிவு நோயாளிகள் மாவுச்சத்து அதிகம் உள்ள உணவை உண்ணக் கூடாது.
உலர் திராட்சை: உலர் திராட்சை பழத்தில் குளுக்கோஸ் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக உடலில் குளுக்கோஸின் அளவு கணிசமாக அதிகரிக்கிறது. ஆகையால் நீரிழிவு நோயாளிகள் திராட்சையை உட்கொள்ளக்கூடாது.
உருளைக்கிழங்கு: நீரிழிவு நோயாளிகள் உருளைக்கிழங்கையும் மிகக் குறைந்த அளவில் உட்கொள்ள வேண்டும். அதிக உருளைக்கிழங்கு சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும். உருளைக்கிழங்கில் அதிக கார்போஹைட்ரேட் உள்ளது, மேலும் அதில் கிளைசெமிக் குறியீட்டின் அளவும் மிக அதிகமாக உள்ளது. உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
No comments:
Post a Comment