இந்த கொளுத்தும் கோடை வெயிலில் உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவுகளை தெரிவு செய்து உண்பது அவசியமான ஒன்றாகும்.அந்த வகையில் கேழ்வரகு மில்க் ஷேக் மிகவும் அற்புதமான ஓர் உணவாகும். கேழ்வரகில் கால்சியம், நார்ச்சத்துகள் மிகுந்து காணப்டுகிறது. கேழ்வரகு சேர்த்த உணவுகளை வாரத்தில் ஒரு முறை அல்லது இருமுறை சாப்பிட்டு வந்தால் பற்கள் மற்றும் எலும்புகளின் உறுதித்தன்மையை அதிகரிக்கும்.
உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு கேழ்வரகு உணவுகள் மிகவும் பொருத்தமான ஒன்று. இவற்றில் அரிசியைவிட குறைந்த அளவு கார்போஹைட்ரேட் மற்றும் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. இதனால் இவை சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தாக உள்ளது.
கேழ்வரகில் அதிக அளவில் புரதம் உள்ளது. இது உடலுக்கு வலிமை கிடைக்கவும், எளிதில் ஜீரணமாகவும், மலச்சிக்கல் பிரச்னைகளைத் தீர்க்கவும் உதவுகிறது.
கேழ்வரகு மில்க் ஷேக் செய்யத் தேவையான பொருட்கள்
கேழ்வரகு - 50 கிராம்
பாதாம், முந்திரி, திராட்சை (ஊற வைத்தது) - தலா 4
பேரீச்சை - 5
காய்ச்சியப் பால் - 200 மி.கி
ஏலப்பொடி - 1 தேக்கரண்டி
சர்க்கரை - சுவைக்கேற்ப
கேழ்வரகு மில்க் ஷேக் சிம்பிள் செய்முறை:
முதல்நாள் இரவில் ஊற வைத்த கேழ்வரகை நீர் விட்டு அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். சக்கையை மீண்டும் சிறிது நீர் விட்டு அரைத்து வடிக்கட்டவும்.
பின்னர், ஊற வைத்து தோல் நீக்கிய பாதாம், முந்திரி, திராட்சை, பேரீச்சையை சிறிது பால் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
இப்போது இரண்டு கேழ்வரகு பாலையும் ஒன்றாக சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் காய்ச்சவும்.
அதனுடன் அரைத்த பாதாம் விழுது, மீதம் உள்ள பால், ஏலப்பொடி சேர்த்து மேலும் சிறிது நேரம் காய்ச்சி இறக்கவும்.
இப்போது நீங்கள் எதிர்பார்த்த சத்தான மற்றும் ஆரோக்கியமான கேழ்வரகு மில்க் ஷேக் தயார். அவற்றை டம்ளரில் பரிமாறி ருக்கலாம்.



No comments:
Post a Comment