JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம், இன்றுடன் முடிகிறது.அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஆசிரியர்களாக பணியாற்ற, தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், இரண்டு முறை ஆசிரியர் தகுதி தேர்வை நடத்த, மாநிலங்களுக்கு, மத்திய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் அறிவுறுத்திஉள்ளது.நடப்பு கல்வி ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு, மார்ச் 7ல் அறிவிக்கப்பட்டது. இதற்கான விண்ணப்ப பதிவு மார்ச் 14ல் துவங்கியது; ஏப்., 13ல் முடிந்தது. இணையதள, 'சர்வர்' பிரச்னையால், விண்ணப்பிக்க முடியவில்லை என பலர் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, அவகாசம் அளிக்கப்பட்டு, இம்மாதம் 18ம் தேதி மீண்டும் விண்ணப்ப பதிவு துவங்கியது; இன்றுடன் அவகாசம் முடிகிறது. மொத்தமாக ஐந்து லட்சம் பேர் வரை விண்ணப்பித்திருக்கலாம் என தெரிகிறது.
No comments:
Post a Comment